வெள்ளி, 7 ஏப்ரல், 2023
புதன், 5 ஏப்ரல், 2023
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
வெள்ளி, 31 மார்ச், 2023
திரு. தானியேல்
திரு. புண்ணியகோடி
(திரு. தானியேல்)
திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்)
திருமதி அமராவதி ஆத்திக்கண்
திரு. புண்ணியகோடி (தானியேல்), பிரசித்திப்பெற்ற ஒரு ஜோசியர். உயரமான, வாட்டசாட்டமான, வலுவான அவரது உடலமைப்பும், எதற்கும் அஞ்சாத அவரது நிமிர்ந்த நடையும், மற்றவர்களால் மதிக்கப்படும் நிலைக்கு அவரை உயர்த்திவைத்திருந்தது. அவர் காதிலே போட்டிருந்த பொன்னாலான பொட்டுக் கடுக்கன் போவோர் வருவோரெல்லார் கண்ணையும் சிமிட்டிச் சிமிட்டிப் பார்க்கச்செய்துகொண்டிருந்தது. விருந்தாளிகளாக அல்லாமல், வருங்காலத்தைக் கேட்கவும், நிகழ்காலத்தை அறிந்துகொள்ளவும் ஜோசியம் கேட்க வரும் கூட்டத்தினால் எப்போதும் நிறைந்திருந்தது அவரது வீடு. திரு. ராமசாமி ராமர் (வேதநாயகம்), திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்), திரு. பால்ராஜ், திரு. பன்னீர், திருமதி சிலம்பர வடிவு, திருமதி. பார்வதி என்பவர்கள் அவர் பெற்றெடுத்தப் பி;ள்ளைகள். தமிழகத்தின் தென்கோடியில் தங்களது வாழ்வின் ஓட்டத்தைத் தொடங்யிருந்த இக்குடும்பத்தினரை காலம், அங்கிருந்து நகரச்செய்தது.
திரு. தானியேல் அவர்களது மறைவிற்குப் பின், இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர் அவரது பிள்ளைகள். எங்கு போகிறோம் என்பதை அறியாதவர்களாக, தங்களால் சுமக்கக்கூடிய அளவிற்கு வீட்டு உபயோகப் பொருட்களையும், வழிக்கான உணவுப் பொட்டலங்களையும் உடன் எடுத்துக்கொண்டவர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். நீண்ட தூரம் நடந்து, வழியில் களைப்படந்தவர்களாக நிழலிருக்கும் இடங்களில் சற்று இளைப்பாறி, வாழ்க்கைக்கு ஏற்ற விரும்பும் இடம் வரும்வரைக்கும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். மெல்ல மெல்ல தெரிந்திருந்த பாதையின் திசையில் அவர்கள் கால்கள் பயணித்துக்கொண்டிருந்தன. பயணத்தின் ஓரிடத்தில், வழிக்காகக் கொண்டுவந்திருந்த கோழி முட்டையுடன் கூடிய உணவுப் பொட்டலம் ஒன்று திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) கையிலிருந்து தவறிக் கீழே விழ, பட்டெனக் குனிந்து சடாரென அதை எடுக்க முயற்சித்தார் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்). அச்சமயம், எசக்கி அம்மன் கோவிலுக்கு முன் உடவுப்பொட்டலம் விழுந்துகிடப்பதைக் கண்ட உடனிருந்வர்கள், அதை நீ எடுக்கவேண்டாம் என்று திரு. நம்மையாழ்வாரைத் (சாமுவேல்) தடுத்தபோதிலும், பொட்டலத்தில் இருந்த உணவின் மேலிருந்த பிரியத்தினால், அதை அங்கேயே விட்டு விட்டுப் பிரிந்து செல்ல மனமற்றவராக, உடனிருந்தவர்களின் வார்த்தைகளை உதறிவிட்டு, பொட்டலத்தைக் கையில் எடுத்தவராக மகிழ்ச்சியுடன் தனது பயனத்தைத் தொடர்ந்தார் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்). ஒருவழியாக, தூத்துக்குடி மாவட்டத்தின், சாயர்புரத்திற்கு அருகிலிருக்கும் சுப்ரமணியபுரத்தை ஒட்டிய பட்டாண்டிவிளைக்கு அனைவரும் வந்து சேர்ந்ததும், அவ்வூரின் சூழ்நிலையையும் மற்றும் அங்கிருந்த சிறியதொரு கோவிலையும் கண்டு, வசிப்பதற்கு அது ஏற்ற இடமென்றுத் தீர்மானித்து, அங்கேயே குடிலமைத்து வாழ்க்கையைத் தொடங்கினர்.
அந்நாட்களில் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்) என்பவர் திருமதி அமராவதி ஆத்திக்கண் என்பவரை தனக்கு வாழ்க்கைத் துணையாகத் தெரிந்துகொண்டு, மணவாழ்க்கையைத் தொடங்கினார். மகிழ்ச்சியாகத் தொடங்கிய மணவாழ்க்கையில், 'வடிவு' என்ற முதல் பெண்; குழந்தை பிறந்து, மூன்றுவயதாயிருந்தபோது, 'அனந்தம்மை' என்ற இரண்டாவது பெண் குழந்தை தாயின் வயிற்றில் மூன்று மாதக் கருவாக இருந்தபோது, தனது வாழ்க்கையின் இறுதி நாட்களைத் தொட்டுவிட்டதை உணர்ந்த திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்), கர்ப்பிணியாயிருக்கும் மனைவியின் நிலையையும், தாயின் விலாவிலேயே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் கைக்குழந்தை வடிவையும் கண்டு கலக்கமுற்றவராக, தம்பி திரு. பன்னீரை அழைத்து, அவரது வசத்தில் அவர்களது வாழ்க்கை முழுவதையும் ஒப்படைத்து, பெற்றெடுத்த கடமை குடும்பத்தில் முடிவுபெறாவிட்டாலும், பிரிதொரு தகப்பனாக அவரை அடையாளம் காட்டிவிட்டு, மண்ணில் தன் மூச்சை விட விரும்பினார். வாழ்க்கையின் எல்லையில் தான் நிற்பதை உணர்ந்த அவர், அவர்கள் இனி தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டவராக, அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மரண நேரத்திலும் அவர்களுக்கு மறுவாழ்க்கைக்கு வழிகாட்டியாக, அவர்களை நோக்கி, எனது மரணத்திற்குப் பின் நீங்கள் பட்டாண்டிவிளையில் வசிக்கவேண்டாம், இங்கிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள் என்று கூறியதோடு, வழிபடும் விக்கிரகங்களையும் விட்டுவிட்டு, வேதத்திற்கு மாறிவிடுங்கள் என்ற ஆலோசனையையும் கூறியிருந்தார்.
குறிப்பிட்ட நாளில், 12 மணிக்கு நான் மரித்துவிடுவேண் என்று சரியாக ஜோசியத்தினால் கணித்துச் சொல்லியிருந்தார் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்). அவர் சொல்லியிருந்த நாள் வந்தபோது, அவரது வார்த்தைகளைக் கேட்டிருந்த உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்கள், அவர் மேலேயே விழிவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். மணி 11 ஆனது, வழக்கமாக தான் சாப்பிடும் கும்பாவில் (உணவு உண்ணும் பாத்திரம்), விளிம்பு ததும்ப உணவு நிரப்பி மனைவி பறிமாற, வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, நீரருந்திவிட்டு கட்டிலில் அமர்ந்து மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்தார் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்). இதைக் கண்ட மற்றவர்கள், இன்றைக்கு மரித்துவிடுவேன் என்று சொன்னாரே, இப்படி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட, பன்னிரெண்டு மணிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது, ஆயாசமாக தலைவைத்து கட்டிலில் படுத்த திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்), சாயர்புரம் ஆலயத்தில் பன்னிரெண்டு மணி ஒலிக்கவும் படுக்கையிலேயே உயிர்நீத்தார். தனது மரணத்தைக்கூட இத்தனைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லியிருந்த அவரைக் குறித்து அன்று ஆச்சரியப்படாதவரில்லை.
குடும்பம் செய்வதறியாது திகைத்து நின்ற வேளை அது. உறவினரும், பட்டாண்டிவிளை ஊரிலிருந்தோரும் துக்க நாளில் உடனிருக்க, வீட்டிலிருந்து விடைபெற்ற அவரது சரீரத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, பூதவுடலைத் தீயில் தகனித்தபோது, எத்தனையாய் நீர் ஊற்றி அனைத்தும், மண்டை ஓட்டிலிருந்த நெருப்பு அணையாதிருந்ததைக் கண்டு ஆச்சரியம் கொண்ட உறவினர்கள், மூன்று வயதான, தகப்பனை இழந்த, தாயோடு ஒட்டிக்கொண்டிருந்த குழந்தை வடிவை வீட்டிலிருந்து இடுகாட்டிற்குத் தூக்கிக்கொண்டுவந்து, அவளது கையில் தண்ணீரைக் கொடுத்து எரிந்துகொண்டிருந்த தகப்பனது தலையில் ஊற்றச்சொல்ல, மண்டை ஓட்டிலிருந்த தீ அனவருக்கும் முன் மௌனமானது.
திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்) அவர்களது மரணம், அவரது குடும்பத்தை மாத்திரமல்ல, உடன்பிறந்தவர்களையும் உறவுகளையும் உலுக்கியிருந்தது. வாழ்க்கையைத் தொடங்கிய இடத்திலேயே அவர்கள் மிகப்பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தநேரிட்டது. நாட்களைச் சற்றும் கடத்தாமல், திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்) சொன்ன வார்த்தைகளுக்கு சட்டெனக் கீழ்ப்படிந்து, பட்டாண்டிவிளைக்கு விடைகொடுத்து வடக்கே பயணிக்கத் தொடங்கினர் குடும்பத்தினர். அந்நாட்களில், திரு. பன்னீர் நீர்கடுப்பு வியாதியினால் அதிகம் கஷ்டப்பட்டுவந்தார். இந்நிலையில், வடக்கை நோக்கிய அவர்களது பயணத்தில், லூக்காபுரம் என்ற முட்காடுகள் நிறைந்த வனப்பகுதியை அவர்கள் அடைந்தபோது, திரு. பன்னீர் அவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்துவந்த நீர்க்கடுப்பு திடீரென நின்றுபோனதும், சந்தோஷமடைந்த திரு. பன்னீர், இதுவே நாம் வாழுவதற்கு ஏற்ற இடம் என்பதை குறிப்பால் உணர்ந்துகொண்டவராக, அந்த வனப் பகுதியை விலைக்கு வாங்கி வாழ்க்கையைத் தொடங்கினார். சாயர்புரம் கிறிஸ்தவ ஆலயத்தில் அனைவரும் ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டனர். லூக்காபுரம் முழுவதும் திரு. பன்னீர் அவர்களது பெயரிலேயே இருந்தது; அதற்குப் பின், அவரிடத்திலிருந்தே அங்கு குடிவந்தோருக்குப் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக்கொடுக்கப்பட்டது.
லூக்காபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய திரு. பன்னீருக்கு அழகியதோர் ஆண்குழந்தை பிறந்தது; என்றபோதிலும், பிறந்த சில நாட்களில் அது இறந்துபோனதைக் கண்டு மனம் உடைந்த குடும்பத்தினர், தங்களது பாரம்பரிய வழக்கப்படி தலைப்பிள்ளையை வீட்டின் உள் இருக்கும் இரண்டு தூண்களுக்கு இடையில் குழி தோண்டி, அதில் பிள்ளையை வளர்த்தி பெரியதோர் இரும்பு அண்டா போன்ற பெரிய பாத்திரத்தினால் பிள்ளையை மூடி புதைத்தனர். பிசாசு அதன் மீது ஆளுகை செய்யும் என்பதினால், தலைப்பிள்ளையை இக்குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே புதைப்பதில்லை; வீட்டு வாசலுக்கு உள்ளேயே புதைத்துவந்தனர். தன் குழந்தையைப் பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம், வீட்டினுள் குழந்தை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் மேல் அமர்ந்து கண்ணீர்வடித்து அவ்விடத்தை நனைத்துவந்தார் திரு. பன்னீரின் மனைவி திருமதி ஜெபக்கனி பன்னீர்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதும் இப்படி நடந்துவிட்டதே என்று திரு. பன்னீர் நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவில் தூதன் சொப்பனத்தில் வந்து, உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவனுக்கு சகரியா என்று பெயர் இடு என்று சொல்லிச்சென்றான். அதைத் தொடர்ந்து அடுத்து சகரியா என்ற மகனைப் பெற்றெடுத்தார் திரு. பன்னீர். இந்நாட்களில், கிறிஸ்தவத்திற்கு மாறியபோதிலும், ஆலயத்திற்குச் சென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபேர்திலும், தங்கள் முந்தைய வணக்கங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்காமல், அவைகளையே அவ்வப்போது வணங்கிக்கொண்டிருந்தார் திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) மகள் திருமதி வடிவு.
இந்நாட்களில், அண்ணன் திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்) தன்வசம் விட்டுச் சென்ற பெண் பிள்ளைகளின் வாழ்க்கையினைக் குறித்து அதிக அக்கறை கொண்ட திரு. பன்னீர், தம்பி திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) முதல் மகள் வடிவுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடும் பணியைத் தொடங்கினார். லூக்காபுரத்தில் தங்கியிருந்த நாட்களில், அருகாமையிலிருக்கும் ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினார் திரு. பன்னீர். அச்சமையத்தில், மெஞ்ஞானபுரத்திற்கு அவர் சென்றுவந்த நாட்களில், திரு. ஜெபமணி அவர்களது குடும்பத்தைச் சந்தித்தார். திரு. ஜெபமணி மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர். மெஞ்ஞானபுரம் ஆலயத்திலுள்ள மணி அந்நாட்களில் திரு. ஜெபமணி அவர்களது வீட்டில்தான் இருந்துவந்தது. ஆலய ஆராதனைக்காக, மணி அடிக்கவேண்டிய நேரத்தில் மாத்திரம் மணியை அவரது வீட்டிலிருந்து எடுத்துச் சென்று, மணி அடித்து முடித்ததும் மீண்டும் கொண்டுவந்து அவரது வீட்டிலேயே வைத்துவிடுவது அங்கிருப்போரின் வழக்கமாயிருந்தது. ஊரில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். திரு. பன்னீர் வியாபாரத்தின் நிமித்தமாக அவ்வப்போது மெஞ்ஞானபுரம் செல்வது வழக்கமாயிருந்ததினால், அண்ணன் திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) வேதத்திற்கு மாறிவிடுங்கள் என்று சொன்னதில், ஆலய வாஞ்சை கொண்ட இந்த நல்ல குடும்பத்துடன் சம்மந்தம் கலக்க விரும்பி, 13 வயதான திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) மகள் வடிவை அக்குடும்பத்தில் மணமுடித்துக் கொடுத்தார். திருமதி. வடிவு – திரு. ஜெபமணி அவர்களது குடும்ப வாழ்க்கை தொடங்கியது.
திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்தும், குழந்தையில்லாமலேயே இருந்தார் திருமதி வடிவு. குடும்பத்தினர் ஒருபுறம் சந்ததியை எதிர்பார்த்துக் கவலையில் ஆழ்ந்திருக்க, திரு. நம்மையாழ்வார் (சாமுவேல்) அவர்களின் துணைவியும் மற்றும் தாயுமான திருமதி. அமராவதி மட்டுமே ஆறுதலாயிருந்தார் திருமதி வடிவுக்கு. பெண்ணாகிய திருமதி. அமராவதிக்கு பிள்ளையின் மனம் புண்ணாகிவிடக்கூடாதே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் மேலோங்கி எழ, ஏதாகிலும் செய்யவேண்டுமே என்ற எண்ணத்தோடு இருந்த திருமதி அமராவதியின் மனது கணவனும் மற்றும் கணவனின் மூதாதையர்களும் மூழ்கியிருந்த ஜோசியர்களையே நாடி ஓடியது. ஒருமுறை பரமன்குறிச்சிக்கு அருகேயிருந்த ஜோசியர் ஒருவரிடம் சென்று, மகளுக்காக ஜோசியம் பார்த்தபோது. அந்த ஜோசியர் திருமதி அமராவதியைப் பார்த்து, 'உனது மகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று சொன்னதோடு, 'உங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வருவான், அவனுக்கு கைகளிலும் கால்களிலும் ஆறு ஆறு விரல்கள் இருக்கும்; அவனைக் கண்டதும், அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்புங்கள்; அவன் வந்து சென்றதும் உங்கள் மகளுக்கு குழந்தை பிறக்கும்' என்றும் சொல்லியனுப்பினார்.
ஜோசியரைப் பார்த்துவிட்டு வரும் வழியில், ஏரல் ஆற்றின் அக்கரையில் குழந்தை ஒன்றை கையில் ஏந்திக்கொண்டு நின்ற பெண் ஒருத்தி, திருமதி அமராவதியைப் பார்த்து, 'கொஞ்சம் இந்தக் குழந்தையை கையில் வைத்துக்கொள்ளுங்கள்; எனது சேலையில் அசுத்தம் செய்துவிட்டது, சேலையை சற்று ஆற்றில் அலசிவிட்டுவருகின்றேன் என்று சொல்ல, ஜோசியரைப் பார்த்துவிட்டு வரும் வழியிலேயே குழந்தையையும் பார்த்துவிட்ட ஆனந்தத்தில், ஆசை ஆசையாய் அதனை தனது கரங்களில் வாங்கிக்கொண்டார் திருமதி அமராவதி. சேலையை அலசிவிட்டு வந்து, தனது குழந்தையை அந்தப் பெண் கேட்டபோதும், பரவாயில்லை, உங்களது குழந்தையை நான் ஆற்றைக் கடக்கும் வரை சுமந்துவருகிறேன் என்று சொன்னவராக, குழந்தையை தனது மார்போடு அள்ளி அணைத்துக்கொண்டு அக்கரைவரை பத்திரமாகக் கொண்டுவந்துக் கொடுத்தார் திருமதி அமராவதி.
வீட்டை வந்தடைந்ததும், 'கைகளிலும் மற்றும் கால்களிலும் ஆறு ஆறு விரல்கள் கொண்ட பிச்சைக்காரன் வரும்வரை' காத்துக்கொண்டேயிருந்தார் திருமதி அமராவதி. பிச்சைக்காரனைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, எந்த பிச்சைக்காரன் வீட்டிற்கு வந்தாலும், மகள் வடிவை பிச்சைபோட அனுமதிப்பதில்லை திருமதி அமராவதி. தானே சென்று பிச்சைக்காரனுக்கு ஆறு விரல்கள் இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து பிச்சைபோட்டுவந்தார்.
திடீரென ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் வீட்டிற்கு வெளியேயிருந்து, 'அம்மா.... தாயே....' என்று கூப்பிட, வீட்டிற்குள் இருந்து விரைந்து வந்தார் திருமதி அமராவதி. என்ன ஆச்சரியம்! சோசியர் சொன்னதுபோலவே, அந்த பிச்சைக்காரனின் கைகளிலும் மற்றும் கால்களிலும் ஆறு ஆறு விரல்கள். இதைக் கண்ட திருமதி அமராவதி, ஆச்சரியத்தில் உறைந்தவராக, பிச்சைக்காரனை வீட்டிற்குள் அழைத்து, அவன் வைத்திருந்த சுரைக் குடுவை மற்றம் பிற சுமைகளை தனது கைகளால் இறக்கி வீட்டின் உள்ளே ஒரு பக்கத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, தலை துவட்ட துணியும் கொடுத்து, அருகிலிருக்கும் கிணற்றைக் காண்பித்து குளித்துவிட்டு வாருங்கள் என்று சொன்னதோடு, கணவன் இறந்தபின் தான் வழக்கமாக உடுத்துகின்ற எவ்வித சாயங்களோடு கோடுகளோ இல்லாத முழுவதும் வெள்ளை நிறமான சேலை ஒன்றையும் அவனது கையில் கொடுத்து, வேட்டியாகக் கட்டிக்கொள்ளும்படிச்சொல்லி அனுப்பினார். அந்த பிச்சைக்காரன் குளித்துவிட்டு வருவதற்குள், தலைவாழை இலையை வாங்கிவந்து, ருசியான ஆகாரத்தையும் ஆயத்தமாக்கினார் திருமதி அமராவதி. குளித்துவிட்டு வந்த பிச்சைக்காரனுக்கு இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதே புரியாதிருந்தது! கிடைத்ததுபோக மிச்சம் என்ற மனதோடு, பசியைத் தீர்த்துக்கொள்ள ஆயத்தமானான் பிச்சைக்காரன். வீட்டின் நல்லதொரு இடத்தில் அவனை அமரச்செய்து, அருசுவை உணவு படைத்தபின், அவன் கொண்டுவந்திருந்த சுரைக்குடுவையில் நிரம்ப அரிசியும் கொடுத்து அனுப்பிவைத்தார் திருமதி. அமராவதி. அந்த பிச்சைக்காரன் வந்து சென்ற பத்தாவது மாதம் திருமதி வடிவின் வீட்டை அலங்கரிக்கும் பெண்குழந்தை பிறந்தது; அந்தக் குழந்தைக்கு புஷ்பம் பூமணி ஜெபமணி என பேரிட்டு மகிழ்ந்தனர். முதல் சனிக்கிழமை பூனை குட்டி போட்டது, இரண்டாம் சனிக்கிழமை நாய் குட்டி போட்டது, மூன்றாம் சனிக்கிழமை ஆடு குட்டி போட்டது, நான்காம் அடுத்த சனிக்கிழமை மாடு குட்டி போட்டது, ஐந்தாவது சனிக்கிழமை திருமதி வடிவு அழகிய பெண் குழந்தை புஷ்பம் பூமணி ஜெபமணியைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து பொன்னம்மாள் என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார் திருமதி வடிவு.
ஒருமுறை, திருமதி வடிவும் மகள் திருமதி புஷ்பம் பூமணியும் நடந்துவந்துகொண்டிருந்தபோது, வழியில் கிடந்த பாம்பின் மீது திருமதி வடிவு மிதித்துவிட, சட்டென எழுந்த பாம்பு திருமதி வடிவின் கால் பெருவிரலில் மூன்றுமுறை கொத்தியது. மூன்று பாதை சேருகிற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததினால், திருமதி வடிவு உயிர் பிழைப்பது கடினம் என்று தனது ஜோசியத்தினால் கணித்துச் சொன்னார் திரு. பன்னீர். திருமதி வடிவு இன்னும் உயிரோடு இருக்கும்போதே, திரு. பன்னீர் அவர்களது சொற்படி, அடக்கம் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர் குடும்பத்தினர். பெட்டி செய்யத் தேவையான மரத்தை வாங்க ஒருபுறம் ஆட்கள் புறப்பட்டுச் செல்ல, மறுபுறத்தில் பாம்புகடி விஷத்தினை முறிக்க, வேப்பமரத்து இலைகளை பாம்பு கடித்தவரின் உடலின் மீது மற்றொருவர் அசைத்து பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். விஷம் இறங்கவேயில்லை; மிளகையும், வெற்றிலையையும் வாயில் கொடுத்தபோதிலும், இனிக்கின்றத என்றே சொல்லிக்கொண்டிருந்தார் திருமதி வடிவு. வேப்ப மரத்து இலையை வைத்து பார்வை பார்க்கும் மனிதன் குடித்துவிட்டு வந்திருந்ததினால், இலையை தலையிலிருந்து கீழ் நோக்கி அசைப்பதற்குப் பதிலாக, கீழிந்து மேலாக தலையை நோக்கி அசைத்ததினால், விஷம் அதிகமாக தலைக்கேறியிருந்தது. அச்சமையம் 3 பார்ம் படித்துக்கொண்டிருந்தாள் மகள் புஷ்பம் பூமணியை திருமதி வடிவு அழைத்து, நான் இனி பிழைக்கமாட்டேன் என்று சொல்ல, மகளோ, 'அம்மா, சண்டே கிளாஸ்ல இயேசு கடவுளப் பத்தி சொல்லித் தந்திருக்காங்க, அவர கூப்பிட்ட உடனே வந்து நம்ம கேக்கிறத செய்வாராம், குணமாக்குவாராம்' நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் நீங்கள் ஒருவரிடமும் சொல்லவேண்டாம் எனச் சொல்லிவிட்டு, உடனே ஜெபிக்கும்படியாகச் சென்றாள். தனது வீட்டின் பின்பக்க அறையிலிருந்த நெற்களைச் சேகரித்து வைக்கும் மண்ணினாலான ஏழு குலுக்கைகளுக்கு இடையில் சென்று முழங்கால் படியிட்டு மகள் ஜெபிக்கத் தொடங்கினாள். ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, இடையிடையே எழுந்து வந்து தனது தாயினிடத்தில், 'அம்மா, இப்போ எப்படி இருக்கு?' என்று கேட்க, 'ஏ புள்ள இப்போ, கொஞ்சம் பரவாயில்ல, தலையில இருந்து விஷம் இறங்குற மாதிரி இருக்கு, நீ போய் இன்னும் ஜெபம் பண்ணு' என்றார் தாய் திருமதி வடிவு. பகல் பன்னிரெண்டு மனிக்குள் திருமதி வடிவு இறந்துவிடுவாள் என்று வீட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க. அடக்கம் செய்வதற்காக பெட்டி செய்ய பலகை வாங்கும்படியாகச் சென்ற நபர்களும் லயன் பேருந்தைத் தவறவிட்டுவிட்டு, இனி தூத்துக்குடி செல்ல முடியாது என்று நினைத்தவர்களாக வீடு திரும்பினர். மணி பன்னிரெண்டு ஆனது, இனி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று திரு. பன்னீர் அமர்ந்திருக்க, தலைக்கு ஏறியிருந்த விஷம் கால் பெருவிரலிலிருந்து சொட்டுச் சொட்டாக வடிவதைக் கண்ட திரு. பன்னீர் 10 கோழி குஞ்சுகளைக் கொண்டுவந்து விஷம் வடியும் பெருவிரலில் வைக்க, அத்தனை குஞ்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் செத்துவிழுந்தன. இனி, வடிவு சாகமாட்டாள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் திரு. பன்னீர். பாம்பு கடித்து, உயிர் பிழைத்தபின் திரு. ஜெயபாண்டி, திருமதி சுசிலா ஆகிய இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார் திருமதி வடிவு.
தொடர்ந்து, திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) இரண்டாவது மகளான அனந்தம்மைக்கும் வாழ்க்கைத் துணையைத் தேடும் முயற்சியில் திரு. பன்னீர் தீவிரமாய் செயலாற்றியபோது, மடப்புரத்தில் திரு. நம்மையாழ்வாரின் (சாமுவேல்) இரண்டாவது மகளை மணமுடித்துக் கொடுத்தார் திரு. பன்னீர். என்றபோதிலும் குடித்துவிட்டு வந்த உறவினரான ஒரு மனிதனால் (gpk;j JsfHtm k;afpf;ghy;tpNfh) கொலை செய்யப்பட்டார் திருமதி அனந்தம்மையின் கணவர். அதைத் தொடர்ந்து, திரு. பன்னீர் வசிக்கும் வீட்டிலேயே வாழ்ந்துவந்தார் திருமதி அனந்தம்மை. என்றபோதிலும், மடப்புறத்தில், தான் வாழ்க்கைப்பட்டுச் சென்ற இடத்தில் வாழ்க்கையோடு தொற்றிக்கொண்ட ஆவிகளோடுதான் திருமதி அனந்தம்மையின் வாழ்க்கை தொடர்ந்தது. சில நேரங்களில், வீட்டிற்கு வெளியே திருமதி அனந்தம்மை வரும்போது, திருமதி அனந்தம்மையை (முளவி) தேடிவரும் ஆவிகள், அவரது கரங்களில் தேவையான பணத்தையும், பொருட்களையும் கொடுத்துச்செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்தன. ஒருநாள், திரு. பன்னீர் அவர்களது வீட்டில் திருமதி அனந்தம்மை உறங்கிக்கொண்டிருந்தபோது, கனவில் ஒருவர் வந்து சிலுவையைக் காட்டி இதை அரையில் கட்டிக்கொள் என்று சொன்னதாக, காலையில் எழுந்ததும் திருமதி அனந்தம்மை சொல்ல, உடனே திருமதி அனந்தம்மையை சாயர்புரம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, அன்னம்மாள் என்று ஞானஸ்நானம் கொடுத்தனர். அதற்குப் பின் அந்த ஆவியின் பிடியிலிருந்து திருமதி அன்னம்மாள் விடுதலையானார். இறுதி நாட்கள் வரை தனியாக லூக்காபுரத்திலிருக்கும் வீட்டிலேயே தனது காலத்தைக் கழித்து, வாழ்நாளை நிறைவுசெய்தார் திருமதி அன்னம்மாள்.
வியாழன், 30 மார்ச், 2023
Daniel Puniyakodi
நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவி கொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்;
அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.
(ஏசா. 51:1,2)
திரு. தானியேல் (புண்ணியகோடி)
திருமதி. தானியேல்
1. திரு. வேதமணி (ராமசாமி - ராமர்)
- திரு. ராஜமணி
- திருமதி. முத்தம்மாள்
2. திரு. சாமுவேல் (திரு. நம்மாழ்வார்)
திருமதி. அமராவதி ஆத்திக்கண்
- திருமதி. வடிவு (ஞானவடிவு)
- திரு. ஜெபமனி
திரு.சாமுவேல் ஜான்சன் மாசில்லாமணி
திருமதி. கனகா இன்பென்டா
- திரு. ஏர்னஸ்ட் பால்
- செல்வன். பிளஸ்ஸிங் பால்
- திருமதி. ஷீபா
திரு. ஜாண் மார்க் தேவன்பு
- திருமதி. டபில்லா சூலமித்தி
திரு. இம்மானுவேல் தேவாசீர்
- சாமுவேல் தேவாசீர்
திருமதி. ஜேனட் வசந்தி
திரு. ஜோசப் ஜெபராஜ்
- திருமதி ஜெபராணி
- ஜுலியானா எஸ்தர்
திரு. ஜேசன் காபிரியேல் மாசில்லாமணி
திருமதி. மாலா
- ஜெசி
- ஜெனிட்டா
திருமதி. கிளாடிஸ் நவஜோதி
- பாலின்
- ஜோயல்
திருமதி. பிரிஸ்கில்லா
- ஜாண் சாமுவேல் மாசில்லாமணி
- ஜெரின் கிரேஷியா சுந்தரம்
- திரு. ஞானக்கண் செல்லையா
- திருமதி. தபசுமணி பொன்னம்மாள்
- திரு.எட்வின் சாமுவேல்
திருமதி. சுதா
திரு. அருள்சாமி
- திரு. டேனி
திருமதி. பிரீத்தி
- நிகித்
- திரு. ஜெரி
திருமதி. ஏஞ்சலின்
- ஜுவினா மேரியத்
- ஷைனி
திருமதி. அண்ணமணி
திரு. பாக்கியநாதன்
- சேம் கோயில்ராஜ்
- ஸ்டீவ் பால்ராஜ்
- செல்வி. சுகந்தி புளோரா
- திரு. ஞானமலை ஜெயபாண்டியன்
- திருமதி. ஆனி பெசன்ட்
திருமதி. மேரி எலிசபெத்
- கிறிஸ்டினா ரூத்
- ஜோசுவா ஜெபக்குமார்
திருமதி ஆட்லின் எஸ்தர்
- அபிஷா
- அபிஷேக்
- திருமதி. சுசிலா அமிர்தபாய் (குட்டி)
- திரு. ஸ்டேன்லி
திரு. நவீன் ஷியாம் ரூபன்
- திருமதி. அனந்தம்மாள் (அன்னம்மாள், முளவி)
- திரு. பண்டாரம்
3. திரு. பால்ராஜ் (பனையூர்)
திருமதி பால்ராஜ்
4. திரு. பவுல் பன்னீர்
திருமதி ஜெபக்கனி
- திரு. சகரியா
திருமதி. டோரா புஷ்பம் சகரியா
- திரு. மனோகரன்
- திரு. இளங்கோ
- திரு. பன்னீர் செல்வம் (செல்வா)
- செல்வி அன்பு செல்வி சகரியா
- திருமதி. கிரேஸ் செல்லத்தாய்
திரு. அலெக்ஸாண்டர
பன்னீர் ராஜா
சேரன் ஜாய்ஸ்
கிறிஸ்டோபர்
தேவி விஜயா
ஜெபரத்தினம்
சுலோச்சனா அன்புசெல்வி
- திரு. வேதநாயகம்
திருமதி. பரிமளம் வேதநாயகம்
ஜெபக்கனி அமுதா
சுலோச்சனா அன்புசெல்வி ஜெபரத்தினம்
பாக்கியசெல்வி
செல்வகுமாரி
மெர்க்கின் வெஸ்லி
- திருமதி. கிளாரா கிறிஸ்மஸ்
5. திருமதி. சிலம்பர வடிவு
6. திருமதி. பரிபூரணம் (பார்வதி- குட்ட பாட்டி)
திரு. யோவான் (P.J.John)
- திரு. சாமுவேல் ஏசுவடியான்
திருமதி செல்வமணி சாமுவேல்
- திரு. ஜான்பால்
- திருமதி. ஹில்டா
- திரு. பன்னீர் ஜோசப்
- திரு. பிரபாகரன்
- திரு. அருள்தாஸ்
- திருமதி பேரின்பம்
- திரு. டேவிட்
- திரு. ராசையா
திருமதி ரெபேக்காள்
- திருமதி. சரோஜா செல்வராணி
- திரு. ஜான்ஸன்
திரு. ................
திருமதி. சோபனாள்


.png)

